- கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்
- அஇஅதிமுக
- ஜான் தங்கம்
- தலவாய் சுந்தரம்
- நாகர்கோவில்
- ஆர்எஸ்எஸ்
- கன்னியாகுமரி மாவட்டம்
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- மாவட்ட செயலாளர்
- கன்னியாகுமரி எம்.எல்.ஏ
- அமைச்சர்
- தளவாய்சுந்தரம்
- கன்னியாகுமாரி
- கிழக்கு
- மாவட்டம்
- தின மலர்
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைத்ததற்காக அதிமுக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்எல்ஏவுமான தளவாய்சுந்தரத்தின் அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்பை தற்காலிகமாக பறித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஒரு வாரமாக எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. மீண்டும் தளவாய்சுந்தரம் தான் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்படுவார் என்று அவரது ஆதரவாளர்கள் கருத்து கூறி வந்தனர்.
இந்நிலையில் நேற்று, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுகவுக்கு கட்சி பணிகளை கவனிப்பதற்காக தற்காலிக பொறுப்பாளராக, தற்போது மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள டி.ஜான் தங்கத்தை நியமித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதிமுக தொடக்க விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அது தொடர்பான நிகழ்ச்சி ஒருங்கிணைப்புகள் மேற்கொள்ளும் வகையில், தற்காலிக பொறுப்பாளராக ஜான் தங்கம் நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
The post தளவாய்சுந்தரம் கட்சி பதவி பறிப்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ஜான் தங்கம் நியமனம் appeared first on Dinakaran.