×

தொடர் மழை இருந்தாலும் முழு அளவில் பேருந்துகள் இயக்கம்

சென்னை: நேற்று அதிகாலை முதலே சென்னையில் மழை கொட்டுகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் முழு அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டது. இது குறித்து மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது:

சென்னையில் தொடர் மழை பெய்தாலும், எவ்வித மாற்றமின்றி அட்டவணைப்படி பேருந்துகள் இயக்கப்படுகிறது. சாலைகளில் பெரும்பாலும் வாகன போக்குவரத்து குறைவாக இருந்ததால் குறித்த நேரத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டது. அதிகளவில் மழைநீர் தேங்கிய இடங்களில் மட்டுமே பேருந்துகள் மெதுவாக சென்றன. தாழ்தள பேருந்துகளும் அட்டவணைப்படி இயக்கப்பட்டது. மாநகர போக்குவரத்து கழகத்தில் பேருந்துகள் இயக்கம் சீராகவே இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தொடர் மழை இருந்தாலும் முழு அளவில் பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Transport Corporation ,Dinakaran ,
× RELATED சென்னையில் மழைநீர் தேங்கிய...