×

தொடர் மழை.. தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் 8 விரைவு ரயில்கள் ரத்து

சென்னை: சென்னை பேசின் பாலம் மற்றும் வியாசர்பாடி இடையேயான வழித்தடத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் 8 ரயில்கள் ரத்து செய்யபப்ட்டுள்ளது. திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இன்று மாலை 6.05 மணிக்கு புறப்பட வேண்டிய சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யபப்ட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு ஈரோடு புறப்பட வேண்டிய ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரத்து செய்யபப்ட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 4.35 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யபப்ட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 9.15 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூரு காவிரி எக்ஸ்பிரஸ் சத்து செய்யபப்ட்டுள்ளது.

போடிநாயக்கனூரில் இருந்து இன்று இரவு 8.30-க்கு சென்னை சென்ட்ரல் புறப்பட இருந்த அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் நாளை 10.30-க்கு புறப்பட இருந்த போடிநாயக்கனூர் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டையில் நாளை காலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் புறப்பட இருந்த ஏலகிரி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 5.55-க்கு புறப்பட இருந்த சென்னை சென்ட்ரல் ஜோலார்பேட்டை ஏலகிரி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post தொடர் மழை.. தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் 8 விரைவு ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Basin Bridge ,Vyasarbadi ,Saptakiri Express ,Tirupati ,Chennai Central ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...