×

எனது புகைப்படம், வீடியோவை மீடியாக்களுக்கு தர வேண்டாம்; பாக். உளவுத்துறை புதிய தலைவர் கெடுபிடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.யின் தலைவராக இருந்த ஜெனரல் பாயிஸ் ஹமீத் சமீபத்தில் ஒய்வு பெற்றார். இவரைத் தொடர்ந்து, ஐஎஸ்ஐ.யின் புதிய தலைவராக நதீம் அன்ஜும் நியமிக்கப்பட்டார்.  இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில், நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகின. இதில், அன்ஜும் இடம் பெற்ற படங்கள், வீடியோ எதுவும் இல்லை. இது குறித்து அந்நாட்டு அமைச்சர் ஒருவர் கூறுகையில், `உளவுத்துறை தலைவர் அன்ஜும் தனது புகைப்படங்கள், வீடியோக்கள் எதையும் ஊடகங்களுக்கு கொடுக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ளார்.அதனால்தான், கூட்டத்தில் அவர் பங்கேற்ற படங்கள், வீடியோக்கள் வெளியாகவில்லை,’ என விளக்கம் அளித்தார். இப்பதவியில் அன்ஜும் நியமிக்கப்பட்டு பல நாட்களாகியும் அவருடைய புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை. ஒரு நாட்டின் உளவுப் பிரிவு தலைவர் யாரென்று அடையாளம் தெரியாதவராக இருக்க வேண்டும் என்ற பொது விதியை அவர் கடைபிடிப்பதாக ஓய்வு பெற்ற முன்னாள் ஜெனரல் அம்ஜத் சோயிப் தெரிவித்தார்….

The post எனது புகைப்படம், வீடியோவை மீடியாக்களுக்கு தர வேண்டாம்; பாக். உளவுத்துறை புதிய தலைவர் கெடுபிடி appeared first on Dinakaran.

Tags : Ketubidi ,ISLAMABAD ,Pakistan ,ISI ,General ,Bais Hameed ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா