×

போலீஸ் எல்லாம் வேணாம் வெளியேற மறுத்த எம்பி.க்களை அடித்து நொறுக்கிய சபாநாயகர்: ஜோர்டான் நாடாளுமன்றத்தில் களேபரம்

ஜோர்டான்: மத்திய கிழக்கு நாடான ஜோர்டான் நாட்டு நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான மசோதா மீது நடந்த விவாதத்தில் பெண்களுக்கும் சம உரிமை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதற்கு சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து். ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். உறுப்பினர்களை அவைத் தலைவர் அப்துல் கரிம் துக்மி வெளியேறும்படி உத்தரவிட்டார்.இதனால், ஆத்திரம் அடைந்த அவை துணைத்தலைவர் சுலைமான் அபு, ‘அவையை நடத்த அப்துல் கரிம் துக்மிக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை’ என்று வாதிட்டார். உடனே, அவரை வாயை மூடிக்கொண்டு அவையை விட்டு வெளியேறு என்று துக்மி உத்தரவிட்டார். மேலும் துக்மி அவை காவலரை கூட அழைக்காமல், இருக்கையை விட்டு கீழே இறங்கி வந்து  துணை தலைவரை சரமாரியாக தாக்கினார். மேலும், தனது உத்தரவை மதித்து வெளியேறாத எம்பி.க்களையும்  தாக்கினார். இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. …

The post போலீஸ் எல்லாம் வேணாம் வெளியேற மறுத்த எம்பி.க்களை அடித்து நொறுக்கிய சபாநாயகர்: ஜோர்டான் நாடாளுமன்றத்தில் களேபரம் appeared first on Dinakaran.

Tags : Jordanian parliament ,Jordan ,Middle Eastern ,
× RELATED 85 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஈராக், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்