×

மடத்துக்குளத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

 

திருப்பூர், அக்.15: திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் நாளை (16ம் தேதி) காலை 9 மணி முதல் நாளை மறுநாள் (17ம் தேதி) காலை 9 மணி வரை உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மடத்துக்குளத்தில் முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் அரசு அலுவலகங்கள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள்,கூட்டுறவு சங்கங்கள்,பள்ளிகள்,தாலுகா அலுவலகங்கள்,அரசு விடுதிகள் உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட இருக்கின்றன.பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காணப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மடத்துக்குளத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Madathukulam ,Tirupur ,Collector ,Kristaraj ,Tirupur district ,Dinakaran ,
× RELATED திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!