×

குறைந்த மின்னழுத்த பாதிப்பை தடுக்க அலமாதி, சோழவரம் பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு

புழல்: குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அலமாதி, சோழவரம் பகுதிகளில் புதியதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர்களை மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் திறந்து வைத்தார். சோழவரம் ஒன்றியம், அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர், சோழவரம் ஊராட்சிக்கு உட்பட்ட சோழிபாளையம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி குறைந்த மின்னழுத்தம் வருவதால், அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை, கருத்தில் கொண்டு மேற்கண்ட இரண்டு பகுதிகளிலும் செங்குன்றம், அலமாதி மின்வாரியத்தின் சார்பில் புதிதாக மின்சார டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

ஆவடி மின்வாரிய செயற்பொறியாளர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். செங்குன்றம் உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், சோழவரம் ஒன்றிய குழு துணை தலைவர் வே.கருணாகரன், மின்வாரிய உதவி பொறியாளர்கள் சோழவரம் விஜயகுமார், அலமாதி சயத்துல்லா முன்னிலை வகித்தனர். இதில், மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டு, புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு மின்சார டிரான்ஸ்பார்மர்களை, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post குறைந்த மின்னழுத்த பாதிப்பை தடுக்க அலமாதி, சோழவரம் பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Alamadi, Cholavaram ,Madhavaram ,MLA ,S. Sudharsanam ,Alamathi ,Cholavaram ,Cholavaram Union ,Sriram Nagar ,Alamathi Panchayat ,Chozhipalayam ,Cholavaram Panchayat ,Alamathi, Cholavaram ,
× RELATED வேலையை விட்டு நிறுத்தியதால் பெட்ரோல்...