×

டார்ச்சரால் இளம்பெண் தற்கொலை: கணவன், பெற்றோருக்கு 12 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, செம்பரசனப்பள்ளி பஞ்சாயத்து காருபாலா பகுதியை சேர்ந்த பீமப்பா மகள் சரஸ்வதி(25). உதவி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய இவருக்கும், காளிங்காவரம் பகுதியை சேர்ந்த சதீஷ் (39) என்பவருக்கும் கடந்த 2015ல் திருமணம் நடந்தது. கணவன், மனைவி இடையே தகராறு காரணமாக கடந்த 2016 செப்டம்பர் 9ம் தேதி, சரஸ்வதி தனது பெற்றோர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து சங்கீதாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், சூளகிரி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சதீசுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததும், சதீஷ் மற்றும் அவரது பெற்றோர், கள்ளக்காதலி உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து, சரஸ்வதியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்ததும் தெரிந்தது. இதுதொடர்பான வழக்கை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்ற நீதிபதி லதா விசாரித்து, சரஸ்வதியை தற்கொலைக்கு தூண்டியதாக சதீஷ், அவரது பெற்றோர் கிருஷ்ணப்பா(58), பர்வதம்மாள்(52) ஆகிய 3 பேருக்கும் 12 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ₹3 ஆயிரம் அபராதம் விதித்தும், சதீஷின் கள்ளக்காதலி ரத்தினம்மாள்(40), அவரது மகன் அருண்குமார்(26) ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ₹9 ஆயிரம் அபராதம் விதித்தும் நேற்று தீர்ப்பளித்தார்….

The post டார்ச்சரால் இளம்பெண் தற்கொலை: கணவன், பெற்றோருக்கு 12 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Tags : Bhimappa ,Saraswathi ,Sembarasanapalli panchayat Karupala ,Chulagiri taluk ,Krishnagiri district ,
× RELATED சங்கரராமன் கொலை வழக்கில்...