×

அங்கன்வாடி அருகேயுள்ள டிரான்ஸ்பார்மரை இடமாற்ற கோரிக்கை

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே பத்மாபுரம் கிராமத்தில், அங்கன்வாடி மையம் வளாகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரை, மாற்றியமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், மீசர காண்டாபுரம் ஊராட்சி பத்மாபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் மற்றும் ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகளும், ஆரம்பப்பள்ளி 50 குழந்தைகளும் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம் மற்றும் ஆரம்பப்பள்ளி வளாகத்தின் அருகில் மின்மாற்றி ஒன்று உள்ளது.

அங்கன்வாடி குழந்தைகள், ஆரம்பப்பள்ளி குழந்தைகள் வளாகத்தில் உள்ள மின்மாற்றியின் அருகே விளையாடி வருவதால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அந்த மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அங்கன்வாடி அருகேயுள்ள டிரான்ஸ்பார்மரை இடமாற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,RK Pettah ,Padmapuram ,Anganwadi center ,Meesara Kandapuram Panchayat ,RK Pettai Union ,
× RELATED ஆர்.கே.பேட்டை அருகே அடிக்கடி பழுதாகும்...