×

தனியார் பள்ளி விடுதியில் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை

உடுப்பி மாவட்டம், பிரம்மாவர் அருகே ஹேரடியில் உள்ள தனியார் பள்ளி மதராசா விடுதியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த ரிஹானா பேகத்தின் மகன் முகம்மது ஜாஹித் (12) என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். விடுமுறை முடிந்து கடந்த 11ம் தேதி வீட்டில் இருந்து விடுதிக்கு திரும்பியுள்ளார். இரவு 9 மணியளவில் ஜாஹித் இரவு உணவிற்கு வராததால், விடுதி வார்டன் அவரைத் தேடியபோது, ​​குளியலறையின் கம்பியில் தூக்கிட்டு தொங்குவதைக் கண்டார்.

இதையடுத்து பிரம்மாவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பிரம்மவர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக வீட்டில் இருந்து ஜாஹித்க்கு விடுதிக்கு செல்ல விருப்பமில்லை என்றும், விடுதியில் இருந்த மற்ற மாணவர்களுடன் சண்டையிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

The post தனியார் பள்ளி விடுதியில் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Rihana Begum ,Mohammad Zahid ,Heredi ,Brahmavar ,Udupi ,
× RELATED கர்நாடகாவில் பேருந்து கட்டணம் உயர்வு