×

துணை முதல்வர் அலுவலகத்திற்கு இரண்டு பிஆர்ஓக்கள் நியமனம்


சென்னை: துணை முதல்வர் அலுவலகத்திற்கு இரண்டு மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் வைத்தியநாதன் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: செய்தி மக்கள் தொடர்பு துறையில் இருந்து அயற்பணியில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக (உதவி இயக்குநர்) பணிபுரியும் தேச.கலையரசன் துணை முதல்வர் அலுவலகத்தில் மாற்றுப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக (உதவி இயக்குநர்) சி.சீனிவாசன் துணை முதல்வர் அலுவலகத்தில் மாற்றுப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post துணை முதல்வர் அலுவலகத்திற்கு இரண்டு பிஆர்ஓக்கள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,CHENNAI ,Relations ,Vaidyanathan ,People in Tamil Nadu Electricity Regulatory Commission ,
× RELATED கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை...