×

அரியலூர் முதன்மை சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் ஆபத்து

 

அரியலூர்: அரியலூர் முதன்மை சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு நகராட்சி கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்துநிலையம், கல்லூரி சலை, செந்துறை சாலை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் நடமாடும் முக்கிய சாலைகைளில் கால்நடைகள், தெருநாய்கள் சாலையில் முகாமிடுவதால் அடிக்கடி விபத்துகளும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.

தமிழ்நாடு அரசு சாலைகளில் ஏற்படும் தொடர் விபத்துகளை தடுக்கும் பொருட்டு மாநிலத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகைளில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு அபராதம் விதித்து அதன் உரிமையாளர்களை எச்சரித்துள்ளனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் பழக்கடை உணவகங்கள் காய்கறி மார்கெட் உள்ள பகுதிகளில் அதிக அளவில் பசுமாடுகள் , தெருநாய்கள் சாலைகளை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ஒன்று இரண்டுமுறை ஒலிபெருக்கி மூலம் கால்நடைகள் சாலைகளில் நடமாடினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிப்பு விடுத்தனர். அதன் தொடர்ச்சியாக எந்தவித நடவக்கையும் எடுக்கப்படாத நிலையில் தற்பொழுது மழைகாலங்களிலும் குவிந்துகிடக்கும் குப்பைகளை கிளறி விடுவதால் துர்நாற்றம் ஏற்படுவதுடன் சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன் அதை பிடி த்து ஏலநடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post அரியலூர் முதன்மை சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் ஆபத்து appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Old Bus Stand ,College Salai ,Senturai Road ,Ariyalur Municipality ,Ariyalur Main Road ,Dinakaran ,
× RELATED ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்