×
Saravana Stores

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக அக்டோபர் 16, 17 தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை

திருவள்ளூர்: கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக அக்டோபர் 16, 17 தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்த உள்ளார். பாகமதி ரயில் ஓட்டுநர், தொழில்நுட்ப பணியாளர்கள், கவரைப்பேட்டை ரயில் நிலைய மேலாளரிடம் விசாரணை நடத்த உள்ளார்.

திருவள்ளூர் அருகே கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில், சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. மைசூரில் இருந்து தர்பங்கா செல்லும் பாக்மதி அதிவிரைவு ரயில் (12578) கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது. 75 கி.மீ. வேகத்தில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், ஏற்கனவே லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்னால் மோதியது.

பயணிகள் ரயிலின் எஞ்சினுக்கு பின்னால் இருந்த, பவர் பாக்ஸுடன் கூடிய சரக்குகள் வைக்கும் பெட்டியில் தீப்பிடித்தது. சரக்கு ரயிலின் பெட்டிகள் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், பயணிகள் ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டன. மூன்று பெட்டிகள் பக்கவாட்டில் சாய்ந்த நிலையில், 2 பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி உருக்குலைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், ரயில் பெட்டியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

ரயில் விபத்தில், 13 பெட்டிகள் தடம்புரண்டதால் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து விபத்து ஏற்பட்ட பகுதியில் தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி, நேற்று பகலில் ஆய்வு செய்தார். இந்நிலையில் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக அக்டோபர் 16, 17 தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்த உள்ளார்.

பாகமதி ரயில் ஓட்டுநர், தொழில்நுட்ப பணியாளர்கள், கவரைப்பேட்டை ரயில் நிலைய மேலாளரிடம் விசாரணை நடத்த உள்ளார். சென்னை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் வைத்து ரயில் ஓட்டுனர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்துகிறார். கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் நடைபெறும் மீட்புப் பணிகள் இன்று நிறைவடையும் என்று ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக அக்டோபர் 16, 17 தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Railway Safety Commissioner ,Kawaripettai train accident ,Thiruvallur ,A. M. Choudhury ,Bhagamati ,Kawaripettai ,Kagrappettai train ,Dinakaran ,
× RELATED கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 11...