- ஜெகதீசன்
- தமிழ்
- தமிழ்நாடு
- கோயம்புத்தூர்
- நாராயண் ஜெகதீசன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ரஞ்சி டிராபி எலைட் பிரிவு டி லீக்
- செளராஷ்டிராவின்
- ஷிரி ராமகிருஷ்ணா
கோவை: சவுராஷ்டிரா அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் டி பிரிவு லீக் ஆட்டத்தில், தொடக்க வீரர் நாராயண் ஜெகதீசனின் அபார சதத்தால் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 203 ரன்னுக்கு சுருண்டது (அர்பித் வாஸவதா 62*, சிராக் ஜனி 34, 77 ஓவர்). தமிழக பந்துவீச்சில் சோனு யாதவ், முகமது, சாய் கிஷோர் தலா 3 விக்கெட், பிரதோஷ் ரஞ்சன் 1 விக்கெட் வீழ்த்தினர். நேற்று நடந்த 2ம் நாள் ஆட்ட முடிவில், தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன் குவித்துள்ளது. சாய் சுதர்சன் 82 ரன் (159 பந்து, 8 பவுண்டரி), நாராயண் ஜெகதீசன் 100 ரன் (165 பந்து, 11 பவுண்டரி), பாபா இந்திரஜித் 40 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். பிரதோஷ் ரஞ்சன் (45 ரன்), பூபதி குமார் (0) களத்தில் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க, தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 75 ரன் முன்னிலை பெற்றுள்ளது. இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.
The post சதம் விளாசினார் ஜெகதீசன்: தமிழ்நாடு முன்னிலை appeared first on Dinakaran.