- கவார்பேட்டை
- எல்.முருகன்
- திருச்சி
- மாநில மத்திய அமைச்சர்
- திருவள்ளூர்
- கவரப்பேட்டை
- மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர்
- திருச்சி ஸ்ரீரங்கம்
திருச்சி: ‘திருவள்ளூர் கவரப்பேட்டையில் நடந்த விபத்தை காரணமாகக் கூறி ரயில்வே துறையை குறைத்து மதிப்பிடக்கூடாது’ என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று திருச்சியில் தெரிவித்தார். ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருவள்ளூர், கவரப்பேட்டையில் நடந்த ரயில் விபத்தால் உயிர்ச்சேதங்கள் இல்லை. இந்நிலையில் இந்த விபத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார். விபத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவது சரியல்ல. விபத்து குறித்து உரிய விசாரணை நடந்து வருகிறது. ரயில்வே துறை பல்வேறு பரிணாம வளர்ச்சியை பெற்று வரும் நிலையில், இந்த விபத்தை வைத்து ரயில்வே துறையை குறைத்து மதிப்பிடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post கவரப்பேட்டை விபத்தை காரணம் காட்டி ரயில்வேயை குறைத்து மதிப்பிடக் கூடாது: எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.