×

கவரைப்பேட்டை நடந்த ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா என போலீசார் விசாரணை

திருவள்ளூர்: கவரைப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்தில் தண்டவாளங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கு நாசவேலை காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் உருக்குலைந்த ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கவரைப்பேட்டை ரயில்விபத்து குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் நிறைவடைய இன்னும் 12 மணிநேரமாகும் என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 140 டன் எடைகொண்ட மெட்டீரியல் கோச்சில் தண்டவாளம் உள்ளிட்ட பொருட்கள் எடுத்துவரப்பட்டன. டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், சார்மினார் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 18 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டுள்ளன. திருப்பதி – புதுச்சேரி, சென்னை திருப்பதி, சூலூர்பேட்டை நெல்லூர் உள்ளிட்ட 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

The post கவரைப்பேட்டை நடந்த ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா என போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kawaripette ,KAWARIPETTA ,Karappettai Train Accident ,Kawaripete ,
× RELATED கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை!