×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது கண்டிக்கத்தக்கது

திண்டிவனம், அக். 11: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் நிருபர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று கூறியதாவது: நியாய விலைக்கடைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நேர்காணல் மூலம் மட்டும் நிரப்ப கூடாது. காலியாக உள்ள 6 பல்கலைக்கழக துணை வேந்தர் பணியிடங்கள் நிரப்பவேண்டும். துணைவேந்தர்கள் தேர்வு குழுவில் பல்கலைக்கழக மானிய குழு பிரதிநிதி நியமிப்பது குறித்து தமிழக அரசுக்கும் ஆளுநருக்கு இடையேயான பிரிவு தான் துணைவேந்தர்கள் நியமிப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் துணைவேந்தர்களை நியமிக்காமல் போனால் 11 பல்கலைக்கழகங்கள் முற்றிலுமாக முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தக்காளி, வெங்காயத்தின் விலை அதிகரித்து உள்ளதால் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை வேண்டும். மின்கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே கட்ட வேண்டும் என்று நிர்பந்திக்க கூடாது. இதனால் கிராம புற மக்கள் மின் கட்டணத்தை கட்டுவது சாத்தியமில்லை. டெங்கு குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எடப்பாடி அருகே புனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது கண்டிக்கத்தக்கது. அதனை வீடியோ எடுத்த வி.சி.கவினர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது கண்டிக்கத்தக்கது appeared first on Dinakaran.

Tags : Dikshitars ,Chidambaram Nataraja Temple ,Tindivanam ,Bamaga ,Ramadas ,Ramadoss ,BAMA ,Thilapuram ,Villupuram district ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலின் 2,000 ஏக்கர்...