- ரஞ்சி டிராபி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- செளராஷ்டிராவின்
- கோயம்புத்தூர்
- ரஞ்சி கோப்பை டெஸ்ட்
- மும்பை
- தின மலர்
கோவை: நாட்டின் முக்கிய உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டான ரஞ்சி கோப்பை டெஸ்ட் போட்டி இந்த ஆண்டு நாடு முழுவதும் 19 நகரங்களில் இன்று தொடங்குகிறது. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை, முன்னாள் சாம்பியன்கள் தமிழ்நாடு, கர்நாடகா, பரோடா, சவுராஸ்டிரா, மகாராஷ்டிரா என மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் எலைட் ஏ, பி, சி, டி, மற்றும் பிளேட் என 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. பிளேட் பிரிவில் நாகலாந்து, மிசோராம், மணிப்பூர், கோவா, அருணாச்சல், சிக்கிம் 6அணிகள் இடம் பெற்றுள்ளன. எலைட்டின் 4 பிரிவுகளிலும் தலா 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு இடம் பிடித்துள்ள எலைட் – டி பிரிவில் டெல்லி, சட்டீஸ்கர், சவுராஸ்டிரா, ரயில்வே, சண்டீகர், அஸ்ஸாம், ஜார்கண்ட் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. தமிழ்நாடு விளையாடும் ஆட்டங்கள் கோவை, டெல்லி, கவுகாத்தி உட்பட 7 நகரங்களில் நடக்கும். இவற்றில் எஞ்சிய 4 நகரங்களை பிசிசிஐ இன்னும் முடிவுச் செய்யவில்லை. தொடர்ந்து 2வது முறையாக சாய் கிஷோர் தலைமையில் தமிழ்நாடு களம் காணுகிறது. கோவையில் இன்று தொடங்கும் முதல் ஆட்டத்தில் சவுராஷ்டிராவை எதிர்கொள்கிறது.
மொத்ததில் கோவை, மும்பை, பெங்களூர், கொல்கத்தா, அகமதாபாத், விசாகப்பட்டினம் என 33 நகரங்களில் ரஞ்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. பல ஆட்டங்களுக்கான இடங்கள் இனனும் முடிவாகவில்லை.
இன்று தொடங்கும் லீக் ஆட்டங்கள் பிப்.2ம் தேதி வரை நடைபெறும். தொடர்ந்து பிப்.8 முதல் பிப்.12ம் தேதி வரை காலிறுதி ஆட்டங்களும், பிப்.17முதல் பிப்.21ம் தேதி வரை அரையிறுதி ஆட்டங்களும் நடத்தப்படும். இறுதி ஆட்டம் பிப்.26 முதல் மார்ச்.2ம் தேதி வரையில் நடக்கும். ஆட்டங்கள் தினமும் காலை 9.30 மணிக்கு நடைபெறும். லீக் சுற்று டெஸ்ட் ஆட்டங்கள் 4 நாட்கள் ஆட்டமாகவும், நாக் அவுட் டெஸ்ட் ஆட்டங்கள் 5 நாட்கள் ஆட்டமாகவும் நடத்தப்படும். தமிழ்நாடு அணி: சாய் கிஷோர்(கேப்டன்), நாரயண் ஜெகதீசன்(து.கேப்டன்), பாபா இந்தரஜித், சாய் சுதர்சன், விஜய் சங்கர், ஷாருக்கான், முகமது அலி, ஆந்த்ரே சித்தார்த்(யு19 தமிழ்நாடு கேப்டன்), அஜித் ராம், லோகேஷ்வர், எம்.முகமது, மணிமாறன் சித்தார்த், லக்ஷய் ஜெயின், பிரதோஷ் ரஞ்சன்பால், பூபதி வைஷ்ணகுமார், குர்ஜப்னீத் சிங், சோனு யாதவ், சந்தீப் வாரியர்.
The post நாடு முழுவதும் 19 நகரங்களில் ரஞ்சி கோப்பை இன்று தொடக்கம்: கோவையில் தமிழ் நாடு-சவுராஷ்டிரா மோதல் appeared first on Dinakaran.