திருப்பூர்: கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் சுரேந்திரன் (32). இவர் பஸ் டிரைவர். இவர், கடந்த 1ம் தேதி 60 பயணிகளுடன் திருப்பூரில் இருந்து கோவை புறப்பட்டார். அவிநாசி பைபாஸ் சாலையில் பஸ் வந்தபோது பலத்த சூறாவளி வீசியதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பயங்கர சத்தத்துடன் வெடித்து உடைந்தது. இதில் நொறுங்கிய கண்ணாடி துண்டுகள் சுரேந்திரன் மீது விழுந்து அவருக்கு தலை, கை, கால்களில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இருப்பினும் காயத்தை பொருட்படுத்தாமல் பஸ்சை லாவகமாக ஓட்டிச்சென்று சாலையோரம் பத்திரமாக நிறுத்தி பயணிகளை காப்பாற்றினார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் டிரைவரை பாராட்டி நன்றி தெரிவித்தனர். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த காட்சிகள் பஸ்சில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைராகியுள்ளதால் டிரைவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
The post சூறைக்காற்றில் கண்ணாடி உடைந்தது: ரத்தம் சொட்ட, சொட்ட பஸ்சை ஓட்டி பயணிகளை காப்பாற்றிய டிரைவர் appeared first on Dinakaran.