×

அஞ்சலிக்காக வைக்கப்பட்ட ரத்தன் டாடா உடல்: அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி

மும்பை: மும்பையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ரத்தன் டாடா உடல் வைக்கப்பட்டுள்ளது. டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா (86) காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரத்தன் டாடா மறைவிற்கு பல்வேறு மாநில முதலமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரத்தன் டாடாவின் தைரியமான அணுகுமுறை மற்றும் சமூக அர்ப்பணிப்புக்காக அவரின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். மேலும், மகாராஷ்டிராவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ரத்தன் டாடா உடல் வைக்கப்பட்டுள்ளது.

மும்பை நரிமன் பாய்ண்ட் பகுதியில் ரத்தன் டாடாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. ரத்தன் டாடாவின் உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

The post அஞ்சலிக்காக வைக்கப்பட்ட ரத்தன் டாடா உடல்: அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Ratan Tata ,Mumbai ,Tata Sons Group ,Ratan Tata… ,
× RELATED அதிர்வலை மூலம் மருந்து செலுத்தும்...