×

மகளிர்உலக கோப்பை இந்தியா 172/3

துபாய்: மகளிர் உலக கோப்பை டி20 தொடரில், இலங்கைக்கு எதிராக இந்தியா அபாரமாக ரன் குவித்தது. துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன் குவித்தது. ஷபாலி வர்மா 43 ரன், ஸ்மிரிதி மந்தனா 50, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 ரன் எடுத்து அவுட்டாகினர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 52 ரன், ரிச்சா கோஷ் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.அடுத்து 20 ஓவரில் 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

The post மகளிர்உலக கோப்பை இந்தியா 172/3 appeared first on Dinakaran.

Tags : Women's World Cup India 172/3 ,Dubai ,India ,Sri Lanka ,Women's World Cup T20 series ,Dubai International Cricket Stadium ,Dinakaran ,
× RELATED துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.7...