×

திருமூர்த்தி அணையிலிருந்து, பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

சென்னை: பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டத் தொகுப்பில் துணை பாசனப் பகுதியாக கருதி திருமூர்த்தி அணையின் பொதுக்கால்வாய் (Common Canal) சரகம் 1.200 கிலோ மீட்டரில் பிரியும் உடுமலைக்கால்வாயில் சரகம் 5.130 கிலோ மீட்டரில் பிரியும் மானுப்பட்டி கிளைக்கால்வாயில் சரகம் 2.653 கிலோ மீட்டரில் உள்ள மதகின் வழியாக திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமத்திலுள்ள பூசாரிநாயக்கன் ஏரிக்கு 10.10.2024 முதல் 13.10.2024 முடிய, திருமூர்த்தி அணையிலிருந்து 20 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

The post திருமூர்த்தி அணையிலிருந்து, பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை appeared first on Dinakaran.

Tags : Thirumoorthi Dam ,Prikurinayakan Lake ,Chennai ,Thirumurthi Dam Common Canal Array ,Parambikulam ,Thirumurthi Dam ,Priest Nayakan Lake ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!