×
Saravana Stores

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் அறிமுகம்: நவம்பர் 17ல் தொடக்கம்; 6 அணிகள் பங்கேற்பு

மும்பை: முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர், நவம்பர் 17ம் தேதி தொடங்குகிறது. நவி மும்பை (டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியம், 4 போட்டி), லக்னோ (வாஜ்பாய் ஏகனா அரங்கம், 6 போட்டி) மற்றும் ராய்பூர் ஷாகீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் (அரையிறுதி, பைனல் உள்பட 8 போட்டி) நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, இலங்கை ஆகிய 6 அணிகள் களமிறங்க உள்ளன.

இந்திய மாஸ்டர்ஸ் அணியின் கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி பிரையன் லாரா தலைமையிலும், ஆஸ்திரேலியா ஷேன் வாட்சன் தலைமையிலும் விளையாட உள்ளன. தென் ஆப்ரிக்க அணிக்கு ஜாக் காலிஸ், இங்கிலாந்துக்கு இயான் மார்கன், இலங்கை அணிக்கு குமார் சங்கக்கரா கேப்டனாக செயல்பட உள்ளனர். மும்பையில் நவ.17ம் தேதி நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோத உள்ளன. லீக் சுற்று, 2 அரையிறுதி மற்றும் பைனல் உள்பட மொத்தம் 18 ஆட்டங்கள் நடக்க உள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் ராய்பூரில் டிச. 5, 6 தேதிகளிலும், இறுதிப் போட்டி டிச.8ம் தேதியுடன் நடைபெறும். அனைத்து போட்டிகளும் இரவு 7.30க்கு தொடங்கும்.

அட்டவணை
தேதி மோதும் அணிகள் களம்
நவ.17 இந்தியா – இலங்கை மும்பை
நவ.18 ஆஸ்திரேலியா – தென் ஆப்ரிக்கா மும்பை
நவ.19 இலங்கை – இங்கிலாந்து மும்பை
நவ.20 வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா மும்பை
நவ.21 இந்தியா – தென் ஆப்ரிக்கா லக்னோ
நவ.23 தென் ஆப்ரிக்கா – இங்கிலாந்து லக்னோ
நவ.24 இந்தியா – ஆஸ்திரேலியா லக்னோ
நவ.25 வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை லக்னோ
நவ.26 இங்கிலாந்து – ஆஸ்திரேலியா லக்னோ
நவ.27 வெஸ்ட் இண்டீஸ் – தென் ஆப்ரிக்கா லக்னோ
நவ.28 இந்தியா – இங்கிலாந்து ராய்பூர்
நவ.30 இலங்கை – இங்கிலாந்து ராய்பூர்
டிச.1 இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் ராய்பூர்
டிச.2 இலங்கை – ஆஸ்திரேலியா ராய்பூர்
டிச.3 வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து ராய்பூர்
டிச.5 முதல் அரையிறுதி ராய்பூர்
டிச.6 2வது அரையிறுதி ராய்பூர்
டிச.8 இறுதிப் போட்டி ராய்பூர்

The post சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் அறிமுகம்: நவம்பர் 17ல் தொடக்கம்; 6 அணிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : International Masters League T20 Series Launch ,MUMBAI ,International Masters League T20 series ,Navi Mumbai ,TY Patil Stadium ,Lucknow ,Vajpayee Egana Stadium ,Raipur Shaheed… ,Dinakaran ,
× RELATED மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி...