மெக்சிகோ: தெற்கு மெக்சிகோவில் உள்ள நகரமான சில்பான்சிங்கோவின் மேயர் பதவியேற்ற 6 நாட்களில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயரான அலெஜான்ட்ரொ ஆர்காஸ் தலை துண்டிக்கப்பட்டதாகவும், அவரது தலையை பிக்-அப் டிரக்கில் விட்டுச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தென்மேற்கு மெக்சிகோவில் உள்ள குவேரோ மாகாணத்தில் சுமார் 2,80,000 பேர் வசிக்கும் சில்பான்சிங்கோ நகரின் மேயர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் அலெஜான்ட்ரொ ஆர்காஸ் என்பவர் வெற்றி பெற்று மேயராக பதவியேற்றார். இந்நிலையில், மேயராக பதவியேற்ற 6 நாட்களில் அலெஜான்ட்ரொ ஆர்காஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்
அலெஜான்ட்ரொ ஆர்காஸ் கொலைக்கு மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றத்தின் நோக்கத்தை தீர்மானிக்கவும், குற்றத்தில் தொடர்புடைய நபர்களை அடையாளம் காணவும் விசாரணை நடந்து வருவதாக ஜனாதிபதி ஷீன்ஹாம் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
குவேரா மாகாணத்தில் சமீப காலமாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் நடந்த பொதுத்தேர்தலின்போது சுமார் 6 வேட்பாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மெக்சிகோ மேயர் பதவியேற்ற 6 நாட்களில் படுகொலை appeared first on Dinakaran.