×

அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆர்டிஓ.,விடம் மனு

 

கரூர், அக். 8: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் புகளூர் வட்டம் தென்னிலை மேல்பாகம் கிராமம் மிகவும் பழுதடைந்த சாலையை புதிய தார்ச்சாலையாக அமைக்க பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக எந்த ஒரு பராமரிப்பும் செய்யாத நிலையில், எங்களுடைய அடிப்படை கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

புகளூர் தாசில்தார் தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது, 15 நாட்களுககுள் சாலை அமைப்பதற்கான உத்தரவு வரும் எனவும், போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதுவரை அந்த பணிகள் நடைபெறவில்லை. எனவே, அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

The post அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆர்டிஓ.,விடம் மனு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Farmers Protection Association RTO ,Karur ,Tamil Nadu Farmers Protection Association ,Karur Commissioner ,Karur district ,Buklur district ,Thennilai Mellbhagam village ,
× RELATED கரூர் வெங்கமேடு அருகே பாம்பு கடித்து பெண் பலி