×

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சங்ககிரி, அக்.8: சங்ககிரி கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது. மேட்டூர் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட சங்ககிரி கோட்ட மின் நுகர்வோர்களுக்கான மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம், நாளை (9ம்தேதி) காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை, சங்ககிரி மின்செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. மேட்டூர் மேற்பார்வை பொறியாளர் கலந்து கொண்டு, குறைகளை கேட்டறிகிறார். அதனால், சங்ககிரி கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் நேரில் வந்திருந்து மின்சாரம் தொடர்பான குறைகள் இருந்தால், அதனை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்த தகவலை செயற்பொறியாளர் உமாராணி தெரிவித்துள்ளார்.

The post மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Sangakiri ,Sangakiri district ,Mettur ,Dinakaran ,
× RELATED குரங்குகள் தொல்லையால் அவதி