- சென்னை
- சக்தி வாரியம்
- சிந்தாதிரிப்பேட்டை
- அண்ணாசாலை பிரிவு
- லாபாண்ட் தெரு
- அண்ணாநகர் மின்சார வாரியம்
- அண்ணாநகர்
- தமிழ்நாடு மின் உற்பத்தி
- Nanganallur
- கிண்டி பிரிவு
- தின மலர்
சென்னை: மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணாசாலை கோட்டத்திற்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை, லபாண்ட் தெருவில் உள்ள கோட்ட அலுவலகம், அண்ணாநகர் கோட்டத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் மின் வாரிய அலுவலகம், கிண்டி கோட்டத்திற்கு உட்பட்ட நங்கநல்லூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகம் மற்றும் பொன்னேரி கோட்டத்திற்கு உட்பட்ட வேண்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையம் ஆகிய 4 கோட்டங்களிலும், இன்று (8ம் தேதி) காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு மின் விநியோகம் தொடர்பான சந்தேகங்களை தெரிவித்து அதற்கான விளக்கத்தினை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 4 கோட்டங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: இன்று நடக்கிறது appeared first on Dinakaran.