×
Saravana Stores

நடிகர் விக்ரம் நடித்த தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடை கோரி வழக்கு

சென்னை: தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் வைணவர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளன.

புத்தமதம் குறித்து புனிதமான முறையிலும் வைணவத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளன. ஏற்கனவே, படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. அவ்வாறு வெளியானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post நடிகர் விக்ரம் நடித்த தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடை கோரி வழக்கு appeared first on Dinakaran.

Tags : Vikram ,Chennai ,Chennai High Court ,Porkodi ,Tiruvallur ,Madras High Court ,Ranjith ,
× RELATED விவாகரத்து வழக்குகளில் தம்பதியரை...