- அர்ச்சுனா நதி
- மார்க்சிஸ்ட் கட்சி
- விருதுநகர்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- தெற்கு ஒன்றிய மாநாடு
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
- கட்சி
- ஆர்ஆர் நகர்
- தின மலர்
விருதுநகர், அக்.7: முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும் என மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய மாநாடு நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு ஜக்கதேவி, முத்து முனியாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டு கொடியை குமார் ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை ஆதிமூலம் முன்மொழிந்தார்.
ஆரோக்கியராஜ் வரவேற்றார். துவக்கிவைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேவா பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் வாழ்த்தி பேசினார். 9 பேர் கொண்ட புதிய ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. அதில் செயலாளராக நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமஸ் பேசினார்.
முடிவில், விருதுநகர்-சாத்தூர் நான்கு வழிச் சாலையில் தனியார் சிமிண்ட் ஆலை மேம்பாலம் கிழக்குப் பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கப்படவில்லை. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, உடனடியாக சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும். கன்னிசேரி பகுதியில் நிறுத்தப்பட்ட மேம்பாலப் பணியை மீண்டும் துவக்க வேண்டும். ஆர்.ஆர்.நகரைச் சுற்றியுள்ள 36 ஊராட்சிகளை ஒன்றிணைத்து தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை appeared first on Dinakaran.