×

மது போதையில் தகராறு சம்மட்டியால் மனைவி தாக்கியதில் கணவர் பலி

புழல்: செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் காட்டுநாயக்கன் நகர் காந்தி தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (39), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (35), செங்குன்றம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கருணாகரன் அடிக்கடி மது குடித்து வந்து வீட்டில் உள்ள மனைவி மற்றும் மகன், மகளுடன் போதையில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்ததார்.

இதில் ஆத்திரமடைந்த மனைவி சரஸ்வதி வீட்டிலிருந்த சம்மட்டி எடுத்து கணவர் தலையில் தாக்கியுள்ளார். தகவலறிந்து வந்த சோழவரம் போலீசார், படுகாயமடைந்த கருணாகரனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கருணாகரன் இறந்தார். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சரஸ்வதியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

The post மது போதையில் தகராறு சம்மட்டியால் மனைவி தாக்கியதில் கணவர் பலி appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Karunakaran ,Gandhi Street ,Bhammadukulam ,Kattunayakan Nagar ,Senkunram ,Saraswati ,Senggunram ,Dinakaran ,
× RELATED புழல் காவாங்கரை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது