×

ஒன்றிய பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபயணம்: பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்பு

தாம்பரம்: ராகுல்காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியல், பொய்ப் பிரசாரம் செய்யும் ஆர்எஸ்எஸ், பாஜவை கண்டிக்கும் வகையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தாம்பரத்தில் தேசிய விழிப்புணர்வு நடைபயணம் நேற்று மாலை நடைபெற்றது. செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், தாம்பரம் மாநகராட்சி உறுப்பினருமான ஆர்.எஸ்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற நடைபயணத்தில் முன்னாள் தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டார்.

தாம்பரம் ஜிஎஸ்டி சாலை – காந்தி சாலை சந்திப்பில் இருந்து தொடங்கிய இந்த நடைபயணம் ஊர்வலமாக மேற்கு தாம்பரம், சண்முகம் சாலை வரை சென்றது. நடை பயணத்திற்கு பின்னர் ஆர்எஸ்எஸ், பாஜவை கண்டித்து கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் முன்னாள் பொதுச் செயலாளர் தாம்பரம் நாராயணன், நகர காங்கிரஸ் தலைவர்கள் விஜய் ஆனந்த், தீனதயாளன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல் பெரம்பூரிலும் காங்கிரஸ் கட்சி சார் பில் நடைபயணம் நடை பெற்றது.

 

The post ஒன்றிய பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபயணம்: பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Union ,BJP ,Peter Alphonse ,Tambaram ,Chengalpattu ,North District Congress ,Rahul Gandhi ,RSS ,President ,Union BJP government ,Dinakaran ,
× RELATED காங்கிரசார் ஆர்ப்பாட்டம்