×

இஸ்ரேலின் இன அழித்தலுக்கு மோடி அரசு ஆதரவு: முத்தரசன் குற்றச்சாட்டு

கோவை: இஸ்ரேலின் இன அழித்தலுக்கு மோசடி அரசு ஆதரவாக உள்ளது என்று முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன் கோவையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இஸ்ரேலில் போர் நடந்து கொண்டிருக்கிற சூழலில் இந்தியாவில் இருந்து 15,000 கட்டுமான தொழிலாளர்களை அனுப்பும் ஏற்பாட்டை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆதரவாக இன அழித்தலுக்கு காரணமாக உள்ளது. இந்த நிலைப்பாட்டை கைவிட்டு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டும். ஒன்றிய அரசின் இந்த போக்கை கண்டித்து (நாளை) இன்று நாடு முழுவதும் இடதுசாரி கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. சாம்சங் தொழிலாளர்கள் விவகாரத்தில் 3 அமைச்சரவை குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டில் அனைத்து பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் ஊதியம் உயரவில்லை. வேலையில்லா திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு என எவ்வளவோ பிரச்னைகள் இருந்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் திருப்பதி லட்டு விவகாரத்தில் மக்களை திசை திருப்பி அற்பத்தனமான அரசியல் நடக்கிறது. இவர் அவர் கூறினார்.

The post இஸ்ரேலின் இன அழித்தலுக்கு மோடி அரசு ஆதரவு: முத்தரசன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,Israel ,Mutharasan ,Coimbatore ,Communist Party of India ,State Secretary ,Rao Mutharasan ,
× RELATED டெல்லியில் இன்று நடைபெறும்...