×

3.5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண சென்ற பொதுமக்களுக்காக 3.5 நிமிட இடைவெளியில் ரயில்களை மெட்ரோ நிர்வாகம் இயக்கியது. விமான சாகச நிகழ்ச்சியை காண லட்சகணக்கான மக்கள் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், ேபருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் மெரினா கடற்கரை நோக்கி குடும்பத்தோடு படையெடுத்தனர்.

இதனால் மெட்ரோ ரயில்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. குறிப்பாக, சாகச நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் வீடு திரும்பும்போது ரயில்நிலையங்களில் நெரிசல் ஏற்பட்டது. ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் வண்ணாரப்பேட்டை – டிஎம்எஸ் மெட்ரோ இடையே, 3.5 நிமிட இடைவெளியிலும், விம்கோ நகர் – விமான நிலைய மெட்ரோ தடத்தில் 7 நிமிடத்திற்கு ஒரு ரயிலும் இயக்கப்பட்டன.

 

The post 3.5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Metro Administration ,Chennai Marina beach ,
× RELATED உலக தரத்தில் மேம்படுத்தும் வகையில்...