×

அணைக்கட்டு அருகே காட்டு பகுதியில் உணவின்றி தவித்த பார்வையற்ற ஜோடி காப்பகத்தில் சேர்ப்பு வீடு, பென்ஷன் வழங்க அதிகாரிகள் உறுதி

அணைக்கட்டு:  வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அல்லேரி மலை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(42). பிறவியிலிருந்தே கண் பார்வையில்லாதவர். இசை கச்சேரியில் வேலை செய்த போது அதே கச்சேரியில் வேலை செய்த புவனா என்கிற லதா(38) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவருக்கும் பார்வை தெரியாது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக நண்பர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு போன்ற பல்வேறு காரணங்களால் இசை நிகழ்ச்சிகள் நடக்காததால் வேலையின்றி தவித்த நிலையில் அவர்களை கவனித்து வந்தவர்கள்,  இருவரையும் வரதலம்பட்டு பகுதிக்கு அழைத்து வந்து விட்டுச்சென்றுள்ளனர். கிராமத்தில் இருந்து காட்டு பகுதியில் உள்ள சிறிய அறையில் ஆதரவும் இன்றி, உணவும் கிடைக்காமல் தவித்தவர்களை கிராம மக்கள் கண்டறிந்து உணவு வழங்கி வந்தனர். இருவருக்கும் கால்களில் அடிபட்டு உரிய சிகிச்சை பெற முடியாமல் தவித்து வந்தனர். இதுகுறித்து நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று காலை தாசில்தார் பழனி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயகுமார், மண்டல துணை தாசில்தார் பழனி, வருவாய் ஆய்வாளர் நந்தகுமார், ஒன்றிய கவுன்சிலர் குமார் மற்றும் அலுவலர்கள், அங்கு சென்று பார்வையில்லாத இருவரையும் மீட்டு, முதலுதவி சிகிச்ைச அளித்து, வாணியம்பாடியில் உள்ள தொண்டு நிறுவன காப்பகத்தில் சேர்த்தனர். இதற்கிடையே, அரசு சார்பில் இருவருக்கும் இலவசமாக பட்டா வழங்கி வீடு கட்டி தரப்படும். இருவருக்கும் நிறுத்தப்பட்ட உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்….

The post அணைக்கட்டு அருகே காட்டு பகுதியில் உணவின்றி தவித்த பார்வையற்ற ஜோடி காப்பகத்தில் சேர்ப்பு வீடு, பென்ஷன் வழங்க அதிகாரிகள் உறுதி appeared first on Dinakaran.

Tags : Ramesh ,Thaluka Alleri Mountain, Vellore District ,Dinakaran ,
× RELATED நண்பர் தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்ற தொழிலாளி