×

கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் காலி பணியிடம் எத்தனை?.. ஐகோர்ட் கிளை

மதுரை: தமிழ்நாட்டில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் (DRT) காலியாக இருக்கும் பணியிடங்கள் எத்தனை? என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கடன் மீட்பு தீர்ப்பாய விவகாரத்தில் ஒன்றிய அரசு நிதித்துறை செயலரை தாமாக முன்வந்து வழக்கில் சேர்த்து ஆணையிட்டது. கடன் மீட்பு தீர்ப்பாய காலி பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கடன் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை. காலி பணியிடங்களை நிரப்ப எடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி ஒன்றிய நிதித்துறை செயலர் அறிக்கை தர உத்தரவிட்டது.

The post கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் காலி பணியிடம் எத்தனை?.. ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : iCourt Branch ,Madurai ,Debt Recovery Tribunal ,DRT ,Tamil Nadu ,EU Government ,Secretary of ,Dinakaran ,
× RELATED கட்சி கொடி மரங்களை ஏன் அகற்ற கூடாது?: ஐகோர்ட் கிளை கேள்வி