உசிலம்பட்டி, அக். 5: கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் எம் சாண்ட், பி சாண்ட், ஜல்லி உள்ளிட்ட பொருட்களுக்கு மதுரை, தேனி மாவட்ட குவாரிகளில் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த திடீர் விலை உயர்வைக் கண்டித்து கடந்த 1ம் தேதி முதல், டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்டுமான பொருட்கள் விலையை குறைக்க கோரியும், லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும், உசிலம்பட்டியில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர், கட்டிட பொறியாளர் சங்கத்தினர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு கட்டுமான தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார். உசிலம்பட்டி பகுதி தலைவர் லெனின் சிவா, செயலாளர் அருள் பிரகாசம், பொருளாளர் விஸ்வநாதன், கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் ரவி, செயலாளர் காசி பாண்டி, பொருளாளர் முத்துமணி, அனைத்து லாரி உரிமையாளர் சங்க தலைவர் செல்வம், செயலாளர் மதுசூதனன், பொருளாளர் தென்றல் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ அய்யப்பன் கலந்து கொண்டு, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
The post கட்டுமான பொருட்கள் விலை உயர்வு கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.