×

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைப்பெற்றது. இதில், உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன் கலந்துகொண்டு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது பேரூராட்சி அலுவலக வளாகத்தில் துவங்கி சன்னதி தெரு, பஜார் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பேரணியில் கலந்துகொண்ட பள்ளி மாணவ-மாணவியர்கள் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள், போதைக்கு அடிமையானால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் தனியார் பள்ளி மாணவ-மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Drug Prevention Awareness Rally ,Uttara Merur ,drug prevention awareness ,Inspector ,Paranthaman ,Sannathi Street ,Bazar Road ,Dinakaran ,
× RELATED அண்ணாத்தூர், சிறுபினாயூர், விசூர்...