திருப்பூர், அக்.4: திருப்பூர் மாநகரின் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் திருப்பூர் மாநகரின் வழியே செல்லும் நொய்யல் ஆற்றில் இரு கரையோரங்களிலும் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இரு கரையோரங்களிலும் சுமார் 13 கி.மீ தூரம் வரையிலும் சாலை அமைக்கும் பணிகள் 70% வரை நிறைவடைந்துள்ளது. விரைவில் போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ள நிலையில் இரு கரை ஓரங்களிலும் பாதுகாப்பிற்காக இரும்பு கம்பி வேலிகள் அமைக்கும் பணியானது நடைபெறுகிறது.
சாலை அமைக்கப்பட்ட பின்பு ஏராளமான வாகனங்கள் இவ்வழியே பயணிக்க கூடிய நிலையில் விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும், வீடு மற்றும் நிறுவனங்களில் சேகரிக்கப்படும் கழிவுகளை நொய்யல் ஆற்றில் கொட்டப்படுவதை தவிர்க்கவும் இருபுறமும் கம்பி வேலிகள் அமைக்கும் பணியானது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
The post நொய்யல் ஆற்றின் இரு கரையோரங்களிலும் கம்பி வேலி அமைக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.