- அமலாக்கத் துறை
- அசாருதீன்
- திருமலா
- தெலுங்கானா மாநிலம்
- ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்
- எச்.சி.ஏ
- காங்கிரஸ்
- தின மலர்
திருமலை: ஜெனரேட்டர் கொள்முதலில் ரூ.20 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் (எச்.சி.ஏ) தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் தலைவருமான முகமது அசாருதீன் பதவி வகித்து வந்தார். அப்போது அவர் உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு டீசல் ஜெனரேட்டர்கள், தீயணைக்கும் கருவிகள் போன்றவற்றை கொள்முதல் செய்ததில் ரூ.20 கோடி முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனரகமும் வழக்கு பதிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அசாருதீனுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை இயக்குனரக அலுவலகத்தில் நேற்று ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அசாருதீன் நேற்று ஆஜராகவில்லை. இதையடுத்து, வரும் 8ம் தேதி ஆஜராகும்படி புதிய சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
The post கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் appeared first on Dinakaran.