×

ஈஷா யோகா மையத்தின் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை தேவை கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர், தனது இரு மகள்களும் ஈஷா மையத்தில் தங்கிக் கொண்டு, முதிய பெற்றோரைக் கைவிட்டிருப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் இந்த வாதத்தின் மீது மிகச் சரியான கேள்விகளை எழுப்பியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. எனவே, ஈஷா யோகா மையத்தின் மீதான அனைத்துப் புகார்கள் மீதும் சங்பரிவார் அமைப்புகள் உள்ளிட்ட எவ்வித அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் உரிய புலன் விசாரணை செய்து அதன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்வதோடு, குற்றங்கள் மீதான பாரபட்சமற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும் காவல்துறையும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஈஷா யோகா மையத்தின் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை தேவை கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Isha Yoga Center ,K. Balakrishnan ,Chennai ,Marxist Communist Party ,Secretary of State ,K. ,Balakrishnan ,Kamaraj ,Goa Vadavalli ,Chennai High Court ,Isha ,Centre ,Dinakaran ,
× RELATED ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு...