- காந்தி
- முதல் அமைச்சர்
- டெவிட்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- காந்திஜி
- மு.கே ஸ்டாலின்
- உத்மர் காந்தி
- எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகம்
- டேவிட்
சென்னை: அகிம்சை, உண்மை, மத நல்லிணக்கத்தின் முகமாக திகழ்பவர் காந்தியடிகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காந்தியடிகளின் 156-வது பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்திய பின் ட்விட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது: ‘‘அகிம்சை, உண்மை, மதநல்லிணக்கம் ஆகியவற்றின் முகமாகவே திகழ்பவர் காந்தியடிகள். அவரை இந்தியாவின் ஆன்மா என்றாலும் மிகையாகாது. காந்தியார் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய சூழலில்தான் அவரது தேவை மிகுதியாக உள்ளது. இந்திய மக்களைப் பிளவுபடுத்தி, அப்பிரிவினைத் தீயில் குளிர்காயும் சக்திகளை வீழ்த்தி, தேசத்தந்தை காணவிரும்பிய சகோதரத்துவ இந்தியாவை மீண்டும் மலரச் செய்து, அவருக்குக் காணிக்கை ஆக்குவோம்’’. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
The post மதநல்லிணக்கத்தின் முகம் காந்தி: முதல்வர் டிவிட் appeared first on Dinakaran.