வெலிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என பரிதாபமாக இழந்தது. அடுத்ததாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி அக்.16- 20ம் தேதி வரை தேதி பெங்களூரு, 2வது டெஸ்ட் அக்.24-28 வரை புனே , 3வது மற்றும் கடைசி கடைசி டெஸ்ட் போட்டி நவ 1-5ம் தேதி வரை மும்பை வான்கடே மைதானத்திலும் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் இன்னும் 2 வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டன், டிம் சவுத்தி அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுபற்றி சவுத்தி கூறுகையில், இது அணியின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு. எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த டெஸ்ட் அணி கேப்டனாக இருந்தது, ஒரு முழுமையான மரியாதை மற்றும் பாக்கியம். எனது வாழ்க்கை முழுவதும் நியூசிலாந்து அணிக்கு முதலிடம் கொடுக்க நான் எப்போதும் முயற்சித்தேன், இந்த முடிவு அணிக்கு சிறந்தது என்று நான் நம்புகிறேன்.
முன்னோக்கிச் செல்லும் அணிக்கு நான் வீரராக சிறந்த முறையில் சேவை செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். தொடர்ந்து விக்கெட்டுகளை எடுப்பது மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற உதவுவது என நான் எப்போதும் செய்தது போல், அணி வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கவும், குறிப்பாக இளம் பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்கும்விதத்திலும் செயல்படுவேன், என தெரிித்துள்ளார். 2022ம் ஆண்டு வில்லியம்சன் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும் அந்த பொறுப்பைஏற்ற டிம் சவுத்தி தலைமையில் நியூசிலாந்து 14 டெஸ்ட்டில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வி அடைந்தது. 2 டெஸ்ட் டிராவில் முடிந்தது. சவுதிக்கு பதிலாக டாம் லதாம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
The post இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நியூசிலாந்து கேப்டன் பதவியில் இருந்து டிம் சவுத்தி திடீர் விலகல் appeared first on Dinakaran.