×
Saravana Stores

மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் சிறு தானிய உணவுப் பொருள் கண்காட்சி கலெக்டர் பார்வையிட்டார் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில்

திருவண்ணாமலை, அக்.2: மகளிர் சுய உதவி குழுக்கள் அமைத்து இருந்து சிறுதானிய உணவு பொருட்கள் கண்காட்சி கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் பார்வையிட்டார். பாரம்பரிய உணவு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், 25 மகளிர் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்ற பாரம்பரிய உணவுப்பொருட்கள் கண்காட்சி நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அதில், பாரம்பரிய அரிசியில் செய்யப்பட்ட உணவு வகைகள், சிறு தானியங்களில் செய்யப்பட்ட தோசை மற்றும் இட்லி, தூதுவளை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளில் செய்யப்பட்ட துவையல்கள், கேழ்வரகு, திணை உள்ளிட்ட சிறு தானியங்களால் செய்யப்பட்ட லட்டு, கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவை கண்காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இந்த கண்காட்சியை, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார். மேலும், சிறுதானிய உணவு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மகளிர் சுய உதவி குழுவினர் அக்கறை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மணி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சரண்யா தேவி, உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

The post மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் சிறு தானிய உணவுப் பொருள் கண்காட்சி கலெக்டர் பார்வையிட்டார் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் appeared first on Dinakaran.

Tags : Women's Self Help Groups ,Thiruvannamalai ,Collector ,Bhaskar Pandian ,Women Self Help Groups ,Tiruvannamalai ,
× RELATED சுய உதவிக்குழுக்கள் சார்பில் தீபாவளி சிறப்பு சந்தை