×

நான் விரும்பும் வழியில் விளையாடுமாறு எனக்கு சுதந்திரம் கொடுத்தனர்: ஆட்டநாயகன் விருது பெற்றபின் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் பேட்டி

கான்பூர்: வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரில் நடைபெற்றன. இதில் சென்னையில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் இருந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி கடந்த 27ம் தேதி கான்பூரில் தொடங்கியது. இந்த ஆட்டத்தின் 5வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 98 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது வென்றார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, என்னுடைய அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். சென்னையிலும் இங்கேயும் சூழ்நிலை வித்தியாசமாக இருந்தது. அதில் என்னுடைய அணிக்காக சிறந்தவற்றை செய்ய என்னுடைய சிறந்த செயல்பாட்டை கொடுக்க முயற்சித்தேன். ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம். ரோகித் மற்றும் கவுதம் சார் நான் விரும்பும் வழியில் விளையாடுமாறு சொன்னார்கள். நாம் சுதந்திரமாக விளையாடி கொஞ்சம் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று நாங்கள் பேசினோம். ஏனெனில் போட்டியை வெல்ல விரும்பிய நாங்கள் அதற்காக சென்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post நான் விரும்பும் வழியில் விளையாடுமாறு எனக்கு சுதந்திரம் கொடுத்தனர்: ஆட்டநாயகன் விருது பெற்றபின் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Jaiswal ,Kanpur ,India ,Chennai ,Dinakaran ,
× RELATED சச்சின் சாதனையை தகர்க்க ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு