×

அவதூறாக பேசிய வழக்கு: வி.எச்.பி. முன்னாள் நிர்வாகி மணியன் மீது குற்றப்பத்திரிகை

சென்னை: அவதூறாக பேசிய வழக்கில் விஷ்வ இந்து பரிஷத் முன்னாள் துணைத் தலைவர் மணியன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மணியனுக்கு எதிராக 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பில் 15 சாட்சிகள், 34 ஆவணங்களை இணைத்து
காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. சென்னை தியாகராயர் நகரில் 2023 செப்டம்பரில் நடந்த கூட்டத்தில் வள்ளுவர், அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய நிலையில், விசிக சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

The post அவதூறாக பேசிய வழக்கு: வி.எச்.பி. முன்னாள் நிர்வாகி மணியன் மீது குற்றப்பத்திரிகை appeared first on Dinakaran.

Tags : V. H. B. ,Manyan ,Chennai ,president ,Vishwa Hindu Parishad ,Primary Session ,Maniyan ,Thiruvaluwar ,Ambedkar ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!