திருக்கச்சி என்னும் காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்ட தொண்டை நாட்டுத் திருப்பதிகள் (திவ்ய தேசங்கள்) மொத்தம் 22. அவற்றுள் காஞ்சியிலேயே 14 திவ்ய தேசங்கள் உள்ளன. மதுராந்தகத்தில் ஏரிகாத்த ராமர் கோயில் உள்ளது. மதுராந்தகத்தில்தான் ராமாநுஜருக்கு பெரிய நம்பிகள் திருவிலச்சினை (ஸமாஸ்ரயணம்) செய்து தம் சிஷ்யராக்கிக் கொண்டார். அத்தகைய மதுராந்தகம், ராமரைச் சேவித்த பின்னர், சென்னை நோக்கி வரும்பொழுது, இடது புறத்தில் மலையின் மீது ஏழுமலையானுக்கென்றே ஏற்பட்டிருக்கும் அழகிய கோயிலொன்று உள்ளது. இவரை தரிசிப்பதினால், துன்பங்கள் விலகி நன்மைகள் சேருகின்றன. இக்கோயிலின் மூலவரின் திருநாமம் பிரசன்ன வேங்கடேச பெருமாள்.
தாயார் பெயர், திருப்பதியில் எப்படியோ அதுபோல இங்கும் அலர்மேலுமங்கையாக பக்தர்களுக்கு சேவைசாதிக்கிறார்.எப்படி செல்வது?: செங்கல்பட்டு – வேடந்தாங்கல் செல்லும் பேருந்துகளில் சென்றால், திருமலை வையாவூர் மலையடிவாரத்திலேயே இறங்கிக்கொள்ளலாம். செங்கல்பட்டிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும், மதுராந்தகத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் திருமலை வையாவூர் அமைந்திருக்கிறது.
தொண்டைமான் சக்ரவர்த்தி, ஒருமுறை பகையரசர்களால் முற்றுகையிடப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தபொழுது, திருவேங்கடமுடையானின் சங்கு சக்கரங்களாகிய திவ்ய ஆயுதங்களை சேவித்து முறையிட்டான். அவர்களும், போரில் அவன் பக்கமிருந்து சங்காழ்வாரும், சக்கரத்தாழ்வாரும் வெற்றியைப் பெற்றுத் தந்தார்கள். இந்த வரலாறு பின்னுள்ளாருக்கும் தெரியும்படி அப்பன், திருமலையில் சங்கு சக்கரமில்லாமல் தரிசனம் தந்துகொண்டிருந்தான்.
எம்பெருமானார் (ராமாநுஜர்) காலத்தில் இதனால் தேவையற்ற பூசல்கள் ஏற்படவே, அதன் பின்னர் திருமலையில் மீண்டும் சங்கு சக்கரங்களைத் தரித்துக்கொண்டான். ஆபத்துக் காலங்களில், அப்பனை அழைத்தால் உடனடியாக பக்தரின் ஆபத்தை விலக்கி அருள்புரிகிறார். இங்கு மூலவரின் பெயர், அப்பன் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், தாயார் ஆண்டாள் என்னும் பெயரில் அருள்கிறாள். அப்பன் வேங்கடேசப் பெருமாளுக்கு, கரியமாணிக்க வெங்கடேசப் பெருமாள் என்னும் இன்னொரு திருநாமமும் உண்டு. அதேபோல், தாயாருக்கும், வைகுந்தவல்லி என்ற பெயரும் உண்டு.
எப்படி செல்வது?: காஞ்சிபுரம் – செங்கல்பட்டு சாலை வழித்தடத்தில் 20கி.மீ. தொலைவில் பழைய சீவரம் உள்ளது. பழைய சீவரத்தில், ஸ்ரீலட்சுமி நரசிம்மர் (மலையடிவாரத்தில்) ஸ்ரீவைகுந்தநாதர் (ஊருக்குள்) கோயில்களைச் சேவித்துவிட்டு, ஆற்றைக் கடந்தால் திருமுக்கூடல் பெருமாளைச் சேவிக்கலாம்.
ஏலகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள இடத்தில் இருந்து வலதுபுறம் திரும்பி சென்றால், இந்த பெருமாள் கோயிலை அடையலாம். பெருமாள் கோயில் ஒரு பள்ளமான இடத்தில் இருக்கிறது. கோயிலுக்கு முன், கோசாலை உள்ளது. படிக்கட்டு அருகில் விநாயகபெருமாள் உள்ளார். கோயிலுக்கு உள்ளே நுழைந்தால், மிகப் பெரிய முன்மண்டபத்தை காணலாம். இடது புறத்தில், ஒரு தொட்டி அமைத்து அதில் நீரை நிரப்பி அதில் கிருஷ்ணர் நாகத்தின் மீது காளிங்க நடனம் ஆடுவது போல் சிலையை அமைத்துள்ளார்கள். நேரே பெருமாள் தனி சந்நதியில் பக்தர்களுக்கு சேவைதருகிறார். அவர் பார்ப்பதற்கு திருப்பதி பெருமாளை போல், மிக பிரமாண்டமாக இருக்கிறார்.
அவரின் வலதுபுறத்தில், ஏலகிரி தாயார் தனி சந்நதியில் உள்ளார். பெருமாளின் இடதுபுறத்தில், ஆண்டாள் நாச்சியார் தனி சந்நதியில் இருக்கிறார். இந்த சந்நதிக்கு அருகில், ஒரு படிக்கட்டு உள்ளது. அதன் வழியாக மேலே சென்றால், ஆழ்வார்கள் சந்நதி, ஆஞ்சநேயர் சந்நதி, சக்கரத்தாழ்வார் சந்நதி மற்றும் ஆதிமூலப்பெருமாள் சந்நதி உள்ளது. இக்கோயிலின் மூலவருக்கு வேங்கடரமணப் பெருமாள் என்ற திருநாமமும், தாயாருக்கு ஸ்ரீஏலகிரி தாயார் என்ற திருநாமமும் பெற்று பக்தர்களுக்கு அருள்கிறார்கள்.எப்படி செல்வது?: திருப்பத்தூர் ரயில் மற்றும் பேருந்து வழித்தடத்தில் ஜோலார்ப்பேட்டையிலிருந்து பேருந்து அல்லது வேன் மூலம் ஏலகிரி மலையின் அத்தனாவூரை அடையலாம். ஏலகிரி மலையிலோ, திருப்பத்தூரிலோ தங்கிக்கொள்ளலாம்.
ஜெயசெல்வி
The post Bits appeared first on Dinakaran.