- அலஹாபாத் ஐகோர்ட்
- ஷமீம் அகமது சத்தியம் செய்தார்
- சென்னை
- உயர் நீதிமன்றம்
- நீதிபதி
- ஸ்ரீராம்
- ஜனாதிபதி
- ஷமீம் அஹ்மது
- அலகாபாத் உயர் நீதிமன்றம்
- சென்னை உயர் நீதிமன்றம்
- ஷமீம் அகமது
- தலைமை நீதிபதி
- கே. ஆர் ஸ்ரீராம் பிரதாபிரமணம்
- அலஹாபாத் அய்கோர்ட்
- நீதிபதி
- ஸ்ரீராம்
சென்னை: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த ஷமீம் அகமதுவை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நீதிபதி ஷமீம் அகமது நேற்று பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவருடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 8 நீதிபதிகள் பதவிகள் காலியாக உள்ளன.
நீதிபதி ஷமீம் அகமது, அலகாபாத்தில் 1966ம் ஆண்டு பிறந்தார். சட்டப்படிப்பை முடித்து 1993ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை தொடங்கிய அவர், 2019ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2021ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட அவரை வரவேற்று, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், எம்பிஏ தலைவர் பாஸ்கர் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவி என்.எஸ்.ரேவதி, லா அசோசியேசன் தலைவர் செல்வராஜ் ஆகியோர் பேசினர். இறுதியில் நீதிபதி ஷமீம் அகமது ஏற்புரையாற்றினார்.
The post அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி ஷமீம் அகமது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பு: தலைமை நீதிபதி ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் appeared first on Dinakaran.