×

நாகர்கோவிலில் அரசு பஸ் மோதி நடுரோட்டில் கவிழ்ந்த டெம்போ

நாகர்கோவில், அக்.1: நாகர்கோவிலில் இருந்து அஞ்சுகிராமம், உவரி வழியாக திசையன்விளைக்கு நேற்று காலை அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ், சுசீந்திரம் ஆனைப்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் பந்தலுக்கான கம்புகளை ஏற்றிக் கொண்டு டெம்போ சென்று கொண்டிருந்தது. சாலையில் பள்ளம் கிடந்ததால், டெம்போ டிரைவர் வேகத்தை குறைத்துள்ளார். அப்போது பஸ் வேகமாக வந்து, டெம்போ மீது மோதியதில், டெம்போ கவிழ்ந்தது. இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்தது. இதில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. டெமபோவில் இருந்த டிரைவரும் லேசான காயத்துடன் தப்பினார். சரியான நேரத்தில் டிரைவர் பிரேக் அடித்ததால், விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் டெம்போ புறப்பட்டு சென்றது. பயணிகள் அனைவரும் மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post நாகர்கோவிலில் அரசு பஸ் மோதி நடுரோட்டில் கவிழ்ந்த டெம்போ appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Vektionvlai ,Anjugram, Uvari ,Suchindram Anaipapalam ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை