×

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை: திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு சென்னையில் நாளை (2ம் தேதி) காலை முதல் மாலை வரை ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நாளை நடைபெற இருக்கிறது. இதில் திராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, நாளை காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை கீழ்கண்ட இடங்களில், ஊர்வலம் செல்லும் நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
* காலை 8 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை, என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் ஈ.வெ.ரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை, பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.
* மாலை 3 மணி முதல் ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் வரை, வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் பேசின் பிரிட்ஜ் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். மேலும், ஈ.வெ.ரா சாலை, முத்துசாமி சாலை மற்றும் ராஜாஜி சாலைகளை பயன்படுத்தலாம்.
* யானைக்கவுனி பாலத்தை ஊர்வலம் கடக்கும் போது சூளை ரவுண்டானாவில் இருந்து டிமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம்.
* ராஜா முத்தையா சாலையில் ஊர்வலம் வரும்போது மசூதி பாயின்டில் இருந்து சூளை ரவுண்டானா நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
* சூளை நெடுஞ்சாலையில் ஊர்வலம் வரும்போது நாராயணகுரு சாலை ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
* அவதான பாப்பையா சாலையில் ஊர்வலம் வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம்.
* பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஊர்வலம் வரும்போது டவுட்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் நாரயண குரு சாலை வழியாக செல்லலாம்.
* ஓட்டேரி சந்திப்பை ஊர்வலம் அடையும் போது மில்லர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
* ஓட்டேரி சந்திப்பில் ஊர்வலம் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்.
* கொன்னூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஊர்வலம் அடையும் போது ஓட்டேரி சந்திப்பு, மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலனி தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம்.

The post திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tirupati Thirukkudai ,Chennai Traffic Police ,Tirupati Thirukudai ,Dinakaran ,
× RELATED சென்னையில் மழைநீர் தேங்கி உள்ளதால்...