×

ஆவடியில் செயல்பட்டு வரும் ராணுவ ஆயுத தளவாட உற்பத்தி தொழிற்சாலையின் ஆண்டு விழா

ஆவடி: ஆவடியில் செயல்பட்டு வரும் திண்ணூர்தி தொழிற்சாலை (ஏ.வி.என்.எல்.) ராணுவ ஆயுத தளவாட உற்பத்தி தொழிற்சாலையின் மூன்றாம் ஆண்டு நிறுவன தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சஞ்சய் திவிவேதி கூறுகையில், உலகத்தரம் வாய்ந்த கவச வாகன தயாரிப்பாளராக உருவெடுப்பதே ஏ.வி.என்.எல்-லின் முக்கிய குறிக்கோள்.

‘ஆத்மநிர்பார் பாரத்’ மற்றும் ‘மேக் இன் இந்தியா’ திட்டங்களுக்கு முக்கிய பங்களிப்பு செய்வதோடு, உள்நாட்டு சந்தையில் முன்னிலை வகிக்கவும் இந்நிறுவனம் முயன்று வருகிறது. எதிர்காலத்தில் சர்வதேச அளவில் ராணுவ தளவாட உற்பத்தியில் முக்கிய பாதுகாப்பு நிறுவனமாக வளர ஏ.வி.என்.எல். திட்டமிட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் ஆயத்தமாகி வருகிறது.
நிறுவன தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிறுவனம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கும் நிறுவனமாக உருவெடுக்கும். 2025-26ம் ஆண்டிற்குள் ஒரு பில்லியன் டாலர் என்ற இலக்கை எட்ட முடிவு எடுத்திருக்கிறோம். தளவாட உற்பத்தி ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இந்த நிறுவனம் பெற்றுள்ளது என்றார்.

The post ஆவடியில் செயல்பட்டு வரும் ராணுவ ஆயுத தளவாட உற்பத்தி தொழிற்சாலையின் ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Army Ordnance Manufacturing ,Avadi ,Aavadi ,Army Ordnance and Logistics Manufacturing Factory Tinnoorthi Factory ,AVNL ,Sanjay Dwivedi ,
× RELATED செங்குன்றம் – ஆவடி இடையே பழுதான நெடுஞ்சாலை சீரமைப்பு